இதில் செங்குன்றம் அருகேஉள்ள காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40) என்பவரிடம் கஞ்சாவை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை ரமேஷை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரது வீட்டில் இருந்து 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார், ஐந்து லட்ச ரூபாய் மற்றும் கஞ்சா எடை மிஷின், இரண்டு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ரமேஷ் கொடுத்த தகவல்படி, செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஹரி (30), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (31), பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (41), சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த கருணாகரன் (34) ஆகிய 4 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதில் ரமேஷ்,ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் கொடுத்து ஆவடியில் இருந்து காசிமேடு வரை விற்பனை செய்துள்ளார். கஞ்சா வாங்குவதற்கும் அவற்றை சென்னையில் விற்பனை செய்வதற்கும் சொகுசு காரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக 5க்கும் மேற்பட்ட கார் நம்பர் பிளேட்டுகளை போலியாக பயன்படுத்தியுள்ளார்.ஆந்திராவுக்கு செல்லும்போது ஆந்திரா பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டையும் சென்னையில் மற்ற இடங்களுக்கு செல்லும்போது சென்னை வாகன எண் கொண்ட நம்பர் பிளேட்களையும் தனது காரில் பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து 6 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஆந்திரா முதல் சென்னை வரை கார் நம்பர் பிளேட் மாற்றி கஞ்சா விற்பனை செய்த கும்பல் சிக்கியது: சொகுசு கார், கத்தி, பணம் பறிமுதல் appeared first on Dinakaran.