கோபால்பட்டி, நவ. 23: சாணார்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டி, வடகாட்டுப்பட்டி, தவசிமடை, நொச்சி ஓடைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவரை கொடி ஒரு ஆண்டு விவசாயமாகும். இப்பகுதிகளில் கம்பிகள் மூலம் பந்தல்கள் அமைத்து அவரை கொடி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அவரை கொடி நன்கு வளர்ந்து காய்கள் காய்க்க துவங்கின. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பார்ட்டிகளில் தண்ணீர் தேங்கி அவரை கொடிகள் அழுக துவங்கியுள்ளன.
இதனால் அவரை கொடிகளில் காய்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு ரூ.பல ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அவரை சாகுபடியில் பந்தல் அமைத்த பின் கொடி நன்கு வளர்ந்து 3 மாதத்தில் காய் காய்க்க துவங்கும். தற்போது தொடர் மழை காரணமாக அவரை கொடி அழுகி காய்ப்பு பாதிப்படைந்துள்ளது. இதனால் ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனனே வேளாண் துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post தொடர் மழையால் அவரை விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.