குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் இழக்கும் சூழல்: பிரௌசரை விற்பனை செய்ய நிர்பந்திக்கும் அமெரிக்க நீதித்துறை

வாஷிங்டன்: அமெரிக்கா அழுத்தத்தால் கூகுள் குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பலரும் தங்களது செல்போன், கணினி உள்ளிட்டவற்றில் பெரிதும் பயன்படுத்தும் இன்டர்நெட் பிரௌசராக கூகுள் குரோம் பிரௌசர் இருக்கிறது. இந்த பிரௌசரை கூகுள் நிறுவனம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக தேடல் சந்தையில் குரோம் பிரௌசர் மூலம் ஏகபோகமாக்கியது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த சூழலில் அதே நீதிமன்றத்தில் குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் விற்க கட்டாயப்படுத்துமாறு அமெரிக்க நீதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குரோம் பிரௌசரை கூகுள் விற்பனை செய்தால் பயனர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. உலகளாவிய பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் அமெரிக்காவில் மட்டும் 61% பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் இழக்கும் சூழல்: பிரௌசரை விற்பனை செய்ய நிர்பந்திக்கும் அமெரிக்க நீதித்துறை appeared first on Dinakaran.

Related Stories: