மறைமலைநகர் நகராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் மீத்தேன் ஆலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ அடிக்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலைகளி இருந்து நாளொன்றுக்கு 33 எம்டி குப்பை சேகரமாகிறது. அதில் 4 நுண்ணுர மையங்கள், 3 வளம் மீட்பு மைகயங்களில் மக்கும் குப்பைகள் பசுமை உரக்குடில் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் உருவாகும் மக்கும் (ம) உணவு கழிவுகளை மறுசுழற்சி செய்திடும் வகையில் அதிலிருந்து வெளிவரும் இயற்கை வாயுவின் மூலம் மின் உற்பத்தி செய்து அதன் மூலம் தெருவிளக்குகள், அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இயக்கப்படும் மின்மோட்டார்களை இயக்கிட பயன்பெறும் வகையில் 15வது நிதிக்குழு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 2022-23ஆம் ஆண்டு திட்ட நிதியின் கீழ் 5 எம்டி கொள்ளளவு கொண்ட உயிரிவழி மீத்தேன் ஆலை நிறுவிட ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்காக வார்டு எண் 8, அடிகளார் சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பின்புறம் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமையில், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் அடிகல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், நகராட்சி பொறியாளர் ஆர்.செல்வராஜ், சுகாதார அலுவலர் எஸ்.செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மறைமலைநகர் நகராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் மீத்தேன் ஆலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: