இதனையடுத்து போலீசார், காமாட்சி, சுலோசனாவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, போதையில் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாக இருந்ததால் தாயும், மனைவியும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘குணசேகரனின் தாய் காமாட்சிக்கு, பூசாரி தெருவை சேர்ந்த விஜயகுமாருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காமாட்சியின் உறவினர்களான திருநங்கைகள் விக்கி (எ) லித்தயானி , குபேந்திரன்(எ) நிபுயா. விஜயகுமார் உட்பட 3 பேரிடமும் மகன் தினமும் குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவதாக புலம்பியுள்ளார். இதனால் குணசேகரனை கொல்ல திட்டமிட்டனர். சம்பவத்தன்று போதையில் தகராறு செய்து விட்டு குணசேகரன் தூங்குவதை காமாட்சி, 3 பேருக்கும் தெரிவித்துள்ளார். 3 பேரும் காமாட்சி வீட்டுக்கு வந்தனர். ஊசியில் (சிரிஞ்ச்) வெறும் காற்றை ஏற்றி குணசேகரனின் உடலில் குபேந்திரன் செலுத்தினார். பின்னர் சுடிதார் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை ெநரித்து கொன்றுள்ளனர்.’’ என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தாய், மனைவி உள்பட 5பேரையும் கைது செய்தனர்.
The post ஊசி மூலம் காற்றை செலுத்தி வாலிபர் கொடூர கொலை: தாய், மனைவி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.