வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது 4 பிரிவில் வழக்கு

சென்னை: தமிழ்நாடு பாஜ ஒருங்கிணைப்பாளர் தலைவர் எச்.ராஜா, கடந்த 7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார். இந்நிலையில் சென்னை விமான நிலைய போலீசார் எச்.ராஜா, வன்முறையை தூண்டும் விதமாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தது குறித்து, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார், புகாரின் அடிப்படையில், எச்.ராஜா மீது, 192 கலவரத்தை தூண்டுதல், 196 (1)(ஏ) வன்முறையை தூண்ட முயற்சித்தல், 353 (1)(பி) பொய்யான தகவல் பரப்புதல், 353 (2) இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

The post வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது 4 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: