அதிர்ச்சியடைந்த ஜீவரத்தினம், இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இவ்வழக்கின் குற்றவாளிகளான வாலாஜாபாத் அருண்குமார் (28), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கணேஷ் (27), வண்டு (எ) மணிகண்டன் (30) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் வெங்கடேசன், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அவரிடமிருந்த செல்போனை பறித்துச்சென்ற ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த நக்கா தருண்குமார் என்பவரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post காஞ்சிபுரம் அருகே செல்போன் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.