இதையடுத்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் வந்த சக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு மோதல் ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தலையிட்டு, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் காங். தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது 506 (1)-கொலை மிரட்டல், 294(பி)-ஆபாசமாக பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கோவையில் காங். கோஷ்டி மோதல் மயூரா ஜெயக்குமார் மீது வழக்கு appeared first on Dinakaran.