கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது

திண்டிவனம், நவ.21: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மன்னார் சாமி கோயில் அருகே காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு யமஹா பைக்கில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் மற்றும் ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரரித்ததில் அவர்கள் இருவரும் புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதி நரிக்குறவர் காலனியை சேர்ந்த சங்கர் மனைவி பவானி(21) மற்றும் ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: