கடலூர், நவ. 17: கடலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த 7ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது கடலூர் துறைமுகம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(44) என்பவர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதைதொடர்ந்து சக்திவேலின் குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில், சக்திவேலை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
The post 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது appeared first on Dinakaran.