கடலூர் மாவட்டத்தில் 12 சிறப்பு எஸ்ஐக்கள் உள்பட 57 போலீசார் இடமாற்றம்

கடலூர், நவ. 15: கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 12 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 57 போலீசாரை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் புதுநகர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்திமோகன், ஏட்டு சுப்புலிங்கம், அசோக்குமார், தேவனாம்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விமலா, காவலர் செந்தில்குமார் ஆகியோர் சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கும், தேவனாம்பட்டினம் தலைமை காவலர் பிரகாஷ் வேப்பூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தலைமை காவலர் அன்வர் அலி தேவனாம்பட்டினத்துக்கும், முருகேசன் புதுநகருக்கும், தலைமை காவலர்கள் முத்துக்குமரன், குமரகுரு ஆகியோர் முதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கடலூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் தியாகராஜன், சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கும். கடலூர் போக்குவரத்து தலைமை காவலர்கள் சரவணன், குகன், நித்யா, போலீஸ்காரர் உத்திராபதி ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் கடலூர் துறைமுகத்துக்கும், தம்பிராஜன் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்துக்கும் என மொத்தம் 57 காவலர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

The post கடலூர் மாவட்டத்தில் 12 சிறப்பு எஸ்ஐக்கள் உள்பட 57 போலீசார் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: