புதுச்சேரி, நவ. 18: அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்பா 1878ல் பிரான்சில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் அவரை கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே தங்கி, அவரது ஆன்மிக, யோக பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973 நவம்பர் 17ம் தேதி மகா சமாதி அடைந்தார்.
இந்நிலையில் அன்னையின் 51வது சமாதி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், ஆசிரம வாசிகளின் கூட்டு தியான நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, அன்னை பயன்படுத்திய அறை, பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. ஏராளமான ஆசிரமவாதிகள், வெளிநாட்டு, வெளிமாநில மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னையின் அறையை தரிசனம் செய்தனர்.
The post அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை சமாதி தினம் appeared first on Dinakaran.