போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

பண்ருட்டி, நவ. 15: பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு சோலை கவுண்டன்பாளையம் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரபாபு மகன் ஜெகத் தலபிரதாபன் (38). இவருக்கு திருவதிகை செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவி ரேகா, சந்திரபாபு மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து 18 வயது சிறுமியை கடந்த 2023 ஜூன் மாதம் 28ம் தேதி மயிலம் முருகன் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர். ஜெகத் தலபிரதாபன், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து அண்ணா கிராமம் மகளிர் ஊர் நல அலுவலர் கோமதி கொடுத்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதி, போக்சோ சட்டம் மற்றும் சிறுமி திருமணம் சட்டத்தின் கீழ் ஜெகத் தலபிரதாபன், உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: