சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம்(16), சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(17), இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(17). மூவரும் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மூவரும் ஒரே பைக்கில் சென்றபோது, ஆவூர் முருகர் கோயில் அருகே சாலையோர அரச மரத்தின் மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (35). இவர் கன்னிவாடி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் டூவீலரில் சித்தரேவு சென்று கொண்டிருந்தார். அவரிடம், ஒட்டன்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள் இருவர் லிப்ட் கேட்டு டூவீலரில் சென்றனர். அப்போது, செம்பட்டி அடுத்த வத்தலக்குண்டு ரோடு கூலம்பட்டி பிரிவு என்ற இடத்தில், எதிரே காய்கறிகள் ஏற்றி வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
The post சாலை விபத்தில் 5 மாணவர்கள், வனக்காப்பாளர் பலி appeared first on Dinakaran.