அவர்களை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டனர். கார்கல தாலுகா, ஹெப்ரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பீதபைலுவி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உறுதியாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டை தொடங்கினர். நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்து அவர்களை சரணடையும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட் இயக்க தலைவர் விக்ரம்கவுடா பலியானார். அவருடன் இருந்த லதா, ராஜு உள்பட மூன்று நக்சலைட்டுகள் தப்பியோடினர். கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடகம் மட்டுமில்லாமல் அட்டகாசம் செய்து வந்தவர் விக்ரம்கவுடா. அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம்கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டதை கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி செய் துள்ளார்.
The post கர்நாடகா நக்சலைட் தலைவர் சுட்டுக் கொலை: போலீஸ் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.