பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புபணி மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், பொன்னேரி சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டரரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளுர் ஆ.கற்பகம், திருத்தணி க.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இருப்பிடங்களை முழு முகவரியுடன் அந்தந்த பள்ளிகளில் இருந்து பெற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார்.

The post பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: