சிறுமியை கடத்தி பலாத்காரம்: 2 டாக்சி டிரைவர்கள் கைது

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தை சேர்ந்த 17வயது சிறுமி, தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 8ம் தேதி மாலை, சிறுமி தனது தோழியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கு வந்த அவரது சித்தி, எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாயே என கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்தவர் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், டாக்சி ஓட்டுநர் ஒருவர் சிறுமியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூர் புளியங்குடி மாவட்டத்தை சேர்ந்த பாக்யராஜ் (38), கடலூர் வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், நந்தம்பாக்கத்தில் தனியாக நின்ற சிறுமியை காரில் கடத்தி சென்று கடலூர் மாவட்டம் வேப்பூரில் வைத்து தானும் தனது நண்பர் பரமசிவம் (40) என்பவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் பம்மலில் உள்ள தனது உறவினர் வீட்டில் சிறுமியை விட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை கடத்தி பலாத்காரம் செய்த 2 பேரையும் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் டாக்சி ஓட்டுநர்கள் பாக்யராஜ், பாமசிவம் ஆகிய 2 பேர் மீதும் கடத்தல் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம்: 2 டாக்சி டிரைவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: