சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில், கடந்த 7ம் தேதி இரவு, சிறுவன் ஓட்டிய பைக், 58 வயது பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய சிறுவனுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சிறுவனுக்கு அவனது நண்பனின் தந்தை பைக் கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய சிறுவன் மற்றும் அவனுக்கு பைக் கொடுத்த நண்பனின் தந்தை மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, சிறுவன் நண்பனின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
