இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், தமிழ்நாடு அரசின் முடிவை 2018ல் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2020ல் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் (இப்போது ஓய்வு பெற்றவர்), நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து அக்டோபர் 22ல் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,’திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை பட்டியலிடுவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. மறுஆய்வுக்கான காரணம் எதுவும் நிறுவப்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை; வேதாந்தா நிறுவன மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி appeared first on Dinakaran.