நாகப்பட்டினத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்

*மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

டிஆர்ஓ பேபி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ம் தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19ம் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20ம் தேதி – சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காகவும், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடை பயணம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் appeared first on Dinakaran.

Related Stories: