கோத்தகிரி காந்தி மைதானம் சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

 

ஊட்டி, நவ. 13: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம், அமைப்பின் கடந்த மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் கோத்தகிரி நகர் பகுதியில் கால்நடைகளை கட்டுப்படுத்தும் விதமாக பட்டி அமைக்க வேண்டும்.

டானிங்டன் பாரதி நகர் முதல் கேர் பெட்டா நடுஹட்டி வரை பொது நடைபாதையை சரி செய்து தர வேண்டும். கோவில்மேடு பகுதியில் உள்ள சமுதாய கூடம் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு திறன் மேம்படுத்தும் வகையில் கோத்தகிரி காந்தி மைதானம் சுற்றி தடுப்பு வேலி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரி காந்தி மைதானம் சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: