கோவில்பட்டி, நவ.11: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் நகராட்சி சேர்மனும், நகர செயலாளருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணை அமைப்பாளரும், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளருமான கணேசன் முன்னிலை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது,
1.1.2025ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்காக நவ.16,17,23,24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒருவரது பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு நீக்கவேண்டும். வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்றது போல், 2026 சட்டமன்ற தேர்தலில் தலைவர் நிர்ணயித்துள்ள இலக்கான 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடவேண்டும். அதற்காக இப்போதே நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினை 2வது முறையாக முதல்வராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், ஒன்றிய செசயலாளர்கள் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னபாண்டியன், கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகராஜா, தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அமலிபிரகாஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்கள் அழகர்சாமி, ராமச்சந்திரன், நாகராஜ், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன், நாலாட்டின்புத்தூர் கிளைச் செயலாளர் புவனேஷ்குமார், கயத்தார் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோதண்டராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பால
முருகன், இளைஞரணி அமைப்பாளர்கள் மகேந்திரன், பாரதி ரவிகுமார், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, மாரீஸ்வரன், ரவீந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், நகராட்சி கவுன்சிலர்கள் தவமணி, விஜயன், லவராஜா, அவைத்தலைவர் முனியசாமி மற்றும் கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு ஒற்றுமையுடன் களப்பணி appeared first on Dinakaran.