ஆந்திராவில் சோதனை ஓட்டம்; நீர் வழித்தட விமானத்தில் சந்திரபாபு நாயுடு பயணம்: 2025 மார்ச் பயன்பாட்டிற்கு வருகிறது

திருமலை: ஆந்திராவில் நீர் வழித்தட விமான சேவை சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து பயணம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் விமான போக்குவரத்துத் துறையுடன் இணைந்து மாநில சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் பிரகாசம் தடுப்பணையில் இருந்து சைலம் அணை வரை நீர் வழித்தட விமான சேவையின் சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் இணைந்து நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் விஜயவாடாவில் பிரகாசம் அணையில் இருந்து 14 பேர் அமரும் விதமாக கொண்ட விமானத்தில் புறப்பட்டு சைலம் அணைக்கு சென்றனர். தண்ணீரில் இருந்து நீரை கிழித்து கொண்டு சென்ற விமானம் சிறிது நேரத்தில் வானில் பறந்து சென்று மீண்டும் 30 நிமிடத்தில் சைலம் அணையில் தண்ணீரில் இறங்கியது.

அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசுகையில், ‘ஆந்திராவில் 4 வழித்தடங்களில் நீர், வான் வழித்தட விமான சேவைக்கு பரிந்துரைகள் உள்ளன. இன்னும் 3-4 மாதங்களில் ஆந்திராவில் இந்த விமான சேவை முழுமையாக பயன்பாட்டிற்கு கிடைக்கும்’ என்றார். தற்போது நடந்த சோதனை ஓட்டத்தின்படி மார்ச் 2025 முதல் இந்த விமான சேவை தொடங்கும் என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

The post ஆந்திராவில் சோதனை ஓட்டம்; நீர் வழித்தட விமானத்தில் சந்திரபாபு நாயுடு பயணம்: 2025 மார்ச் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: