ஆனந்த் அம்பானி கையில் கட்டியுள்ள பிரமிக்கத்தக்க கைக்கடிகாரம்: விலை ரூ.22 கோடிதானாம்


மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு விமரிசையாக நடந்தது. இதில் உலக தலைவர்கள், பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இந்த ஆடம்பர திருமண விழா பற்றி இணையதளங்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்தான் தற்போது அதிகம் தேடப்படும் பொருளாக உள்ளது. அதாவது அவர் அணிந்திருந்தது Richard Mille RM 52-04 Skull Blue Sapphire வாட்ச் என்றும் அதன் மதிப்பு ரூ.22 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த கைக்கடிகாரம் உலகிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை 3 மட்டும்தானாம். இந்த கைக்கடிகாரம் பெட்டி வடிவிலும், உள்ளே கடற்கொள்ளையர் மண்டை ஓடும், வெளிப்புறத்தில் குறுக்கு வடிவிலான எலும்புகளை கொண்டு உள்ளது.

The post ஆனந்த் அம்பானி கையில் கட்டியுள்ள பிரமிக்கத்தக்க கைக்கடிகாரம்: விலை ரூ.22 கோடிதானாம் appeared first on Dinakaran.

Related Stories: