பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம்

பெரம்பலூர்,நவ.8: பெரம்பலூர் பிரம்மபுரீஸ் வரர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 47ம் ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று (7ம்தேதி) நடை பெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்  முருகன் வள்ளி தெய்வானை உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிகளுக்கு காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

நிகழ்ச்சியில் செக்கடித் தெரு, வ.உ.சி.தெரு, பெரிய தெற்குத் தெரு, ஐயப்பன் கோயில்தெரு ஆகிய தெருக்களில் யானைமுகம் பூதமுகம் மற்றும் சூரமுகம் கொண்ட அசுரனை வேட்டையாடி சூரனை அழித்து கடைவீதி வழியாக சிவன் கோயில் வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பா டுகளை கோயில் செயல் அலுவலர் கோயிந்த ராஜன், பெரம்பலூர் நகர நகைக்கடை உரிமையாளர் கள் மற்றும் விஸ்வகர்மா சங்கத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சரவணன், குமார் மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம்,அரணாரை, எளம்பலூர், நெடுவாசல் உள்ளிட்டப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரி சனம் செய்தனர்.

சிசிடிவி கேமரா
பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் இருசக்கர வாகன ஒட்டிகளிடம் பேசிய டிஎஸ்பி ஆரோக்யராஜ், பல லட்சங்களில், கோடிகளில் வீடுகளை கட்டுகின்றோம். நமது வீட்டின் பாது காப்பிற்காக, வீட்டின் முகப்பில் சிசிடிவி கேமரா பொருத்துங்கள். வணிக வளாகங்களில் திருட்டு கொள்ளையைத் தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள். குற்ற செயல்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பலர் யாரென்று தெரியாமல் தப்பிச்செல்வதும், மீண்டும் திரும்பத் திரும்ப அதே குற்றங்களில் அவர்கள் ஈடுபட காரணமாக இருப்ப தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தடுக்கப்படும். குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்க போலீசுக்கு பொது மக்களும் உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

The post பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Related Stories: