கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணம், நவ.6: கும்பகோணத்தில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் பெச ண்ட் ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வாயிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்திட வேண்டும், இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சமூகநல பாதுகாப்புகளை அமல்படுத்து, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிடு, கேசுவல் ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட டி.ஏவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனம் தான் பிரின்ஸிபல் எம்ப்ளாயர் என்பதால் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கடமையாற்ற வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறந்த சேவைகளுக்கு ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கேசுவல் ஊழியர்களை முறையாக பயன்படுத்திட வேண்டும், பிஎஸ்என்எல்-ன் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு த்தி மாவட்ட தலைவர் சிவ க்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவ ட்ட செயலாளர் ராம ச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பக்கிரிநாதன், ராமமூர்த்தி, பிரகாஷ், முருகன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமி ட்டனர். நிறைவாக பாஸ்கர் நன்றி கூறினார்.

The post கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: