சிவகங்கை, நவ.6: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அவசரகால மருத்துவ சிகிச்சை மையத்திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை வகித்து, மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சத்தியபாமா உடல்நலம், உடற்பயிற்சி குறித்து பேசினார். மையத்தில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக இணை இயக்குநர் பிரியதர்ஷினி விளக்கம் அளித்தார்.
விழாவில், நிரந்தர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பக்தவச்சலு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி சாண்டில்யன், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி சுப்பையா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி நிலைய மருத்துவ அலுவல் மகேந்திரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி, நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு appeared first on Dinakaran.