தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 6வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது

 

தஞ்சாவூர், ஜன.5: தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி தஞ்சாவூர் அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் அன்புச் செழியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது நோய் புலனாய்வுகள் பிரிவு உதவி இயக்குனர் தெய்வமிர் உடன் இருந்தார். முகாமில் கால்நடை மருத்துவர் முகமது செரிப் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு 150 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.

நாஞ்சிக்கோட்டை கால் நடை மருந்தகத்துக்குட்பட்ட விளார், கோ.வல்லுண்டாம்பட்டு, நா.வல்லுண்டாம் பட்டு, நாஞ்சிக்கோட்டை, கொல்லாங்கரை ஆகிய பகுதிகளில் 21 நாட்கள் இந்த தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 2.77 லட்சம் கால்நடைகளுக்கு இந்த கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாளுக்கு முன்னர் அந்த பகுதியில் முகாம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். எனவே கால்நடை வளர்ப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 6வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: