பூதலூரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

 

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 5: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் பூதலூர் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சித்திரக்குடி கனகராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பூதலூர் பெரியார் சிலையில் இருந்து கோரிக்கை முழக்கத்துடன் பேரணியாகச் சென்று வட்டாட்சியரிடம் மனு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொன்னிவளவன், சந்திரசேகர், ஜெயபால், எழிலரசன், கல்விராயன் பேட்டை வடிவழகன், ரவி, வைரப்பெருமாள்பட்டி முருகானந்தம், கோவிந்தசாமி, ராயந்தூர் ஜோதிபாண்டியன்,சித்தாயல் கருணாநிதி, இளவரசன்,குணமங்கலம் தங்கராசு, செந்தில், மருதகுடி காமராஜ், சக்திவேல் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பூதலூரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: