முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் மனு

 

முத்துப்பேட்டை, ஜன. 5: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூர் பள்ளி கிளை தலைவர் மூன்லைட் ஹாஜா முகைதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் கிளை செயலாளர் தீன் முஹம்மது கிளை பொருளாளர் அப்துல்லாஹ் ஆகியோர்நேற்று மனு ஒன்றை கொடுத்தனர்.அதில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொ ய்யாத்தோப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தரக்கோரியும் கொய்யாத்தோப்பில் ரயில்வே தண்டவாளம் வரை குடிநீர் இனைப்பு பைப்புகள் அமைத்து அமைத்து தரக் கோரியும் கொய்யா தோப்பு முழுவதும் குப்பைகள் அல்லபடாமல் குப்பைகள் தெருக்ளில் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. அதனை உரிய முறையில் தூய்மைப்படுத்த வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் மனு appeared first on Dinakaran.

Related Stories: