திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பட்டமளிப்பு விழா

 

திருச்சி, ஜன.5: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 2023-2024ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நேற்று காலை கல்லூரி மைதானத்தில் நடந்தது. விழாவின் முதன்மை விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் (பொ) முனைவர்.ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். விழாவில் ஹீபர் கல்லூரியின் கலைத்துறையின் முதன்மையர் முனைவர் ஷோபனா மற்றும் அறிவியல் துறையின் முதன்மையர் வயலட் தயாபரன் பட்டம் பெரும் மாணவர்களின் பெயர்களை பட்டியலிட்டனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,‘‘ நானும் இதே கல்லூரியில் மாணவராக பயின்று இன்று பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இக்கல்லூரி 160 ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கப்பட்டு பெருமை சேர்த்த கல்லூரி. கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும் தலைசிறந்த மாணவராக வருங்காலத்தில் வருவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வெளி உலகத்தில் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக பார்க்க வேண்டும் என்றார்.

 

The post திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: