திருமயம், ஜன.5: திருமயம் அருகே நடைபெற்ற ஊராட்சி சாதாரண கூட்டத்தில் ஊராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி ஊராட்சியில் சாதாரண கடைசி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவராமன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதனிடையே ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் காலங்களில் ஊராட்சியில் பணிகள் தொடர முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி உறுப்பினர்கள், அனைத்து ஓ எச் டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர், துப்புரவு காவலர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
The post திருநங்கைகளிடம் குறை கேட்ட கலெக்டர் அரசம்பட்டி ஊராட்சியில் சாதாரண நிறைவு கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.