வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பாரம்பரிய நெல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

 

நீடாமங்கலம், டிச. 5: பாரம்பரிய நெல்வளர்ப்பு பற்றிய விழி ப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பாரம்பர்ய நெல் வளர்ப்பு பற்றிய விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நீடாமங்கலம் வேளாண் அறிவியல்நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெரியார் ராமசாமி, பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார். தொடர்ந்து முனைவர் .கோகிலவாணி உதவி பேராசிரியர் வேளாண் வானிலையில் இந்த திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றியும் அதனை மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து முனைவர் கருணாகரன், உதவி பேராசிரியர் உழவியல் பாரம்பரிய நெல் ரகங்களில் நன்னெறி வேளாண் தொழில் நுட்பங்களை பற்றி எடுத்துரைத்தார். வடுகப்பட்டி ஊராட்சி தலைவர். அறிவழகன், விவசாயிகளுக்கு கூட்டத்தின் முக்கியத்துவத்தை உரைத்தார். மேலும் இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குணசீலன் செய்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பாரம்பரிய நெல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: