கணவர் சிகிச்சை பெற்ற ரத்தக்கறை படுக்கையை சுத்தம் செய்த கர்ப்பிணி: ம.பி. அரசு மருத்துவமனை அவலம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டம் லால்பூர் சானி கிராமத்தை சேர்ந்தவர் தரம் சிங் மராவி (65). இவரது மகன்கள் ரகுராஜ் மராவி (40), சிவராஜ் மராவி ( 40). இவர்கள் கடந்த 31ம் தேதி அங்குள்ள நிலத்தில் நெல் அறுவடைக்காக சென்றனர். அப்போது, அங்கு வந்த 25 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது சரமாரியாக தாக்கியது. மேலும், அரிவாளால் வெட்டினர். இதில், பலத்த காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிவராஜ் மராவி உரியிழந்தார். அப்போது அவர் படுத்திருந்த படுக்கையில் அதிகளவு ரத்தம் இருந்துள்ளது. இதனை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்யுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதையடுத்து அவர் கண்ணீர் மல்க அதனை சுத்தம் செய்கிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து 2 சுகாதாரத்துறை அதிகா ரிகள் சஸ்பென்ட் செய்யப் பட்டனர்.

The post கணவர் சிகிச்சை பெற்ற ரத்தக்கறை படுக்கையை சுத்தம் செய்த கர்ப்பிணி: ம.பி. அரசு மருத்துவமனை அவலம் appeared first on Dinakaran.

Related Stories: