ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு

சென்னை:  2021 முடிந்து 2022 ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்களில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பூஜை நடக்கிறது. பெருமாள் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதையொட்டி காலை 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களுக்கு ரூ.50க்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறையை கடைபிடிக்கப்படுகிறது. கோயிலுக்கு முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம். பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றனர். பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகு  கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.கோயிலுக்கு சமூக இடை வெளியை கடைபிடித்து பக்தர்கள் எந்த வித சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக திருப்பதி தேவஸ்தான  தலைவர் ஏ.ஜெ.சேகர் தெரிவித்தார். …

The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: