விருத்தாசலம், ஜன. 7: சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடை மேடையில் இரவு 8.35 மணிக்கு வந்த நிலையில் ரயிலில் பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் திரும்ப புறப்படாமல் சுமார் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ததையடுத்து சரியாக இரவு 10.09 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் பயணிகள் அவதி அடைந்தனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற பயணிகள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் காத்திருந்து அவதிப்பட்டனர்.
