ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கலெக்டரிடம் மனு

திருவள்ளூர், ஜன.7: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப்யிடம், திருமழிசை பேருராட்சி 9வது வார்டு கவுன்சிலர் ரவி ராஜேஷ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: திருமழிசை பேருராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களான சர்வே எண்கள் 86-4, 86-5 மற்றும் சர்வே எண்கள் 90-6, 90-7, 90-8, 90-9 ஆகிய இடங்களை சர்வேயர் கொண்டு அளந்து மீட்டெடுக்க வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் இடங்களில் திருமழிசை பேருந்து நிலையம் எதிரில் பேருந்து நிழற்குடையும், எங்கள் பகுதி குழந்தைகள் விளையாட ஏதுவாக விளையாட்டு பூங்காவினையும் அமைக்க ஆவணம் செய்ய வேண்டுகிறேன். மேலும், தற்போது எங்கள் பகுதியில் பெருகி வரும் புதிய குடியிருப்பு மக்களுக்கு தேவையான அடிப்படை நல திட்டங்களை எதிர்வரும் காலங்களில் செயல்படுத்திட ஏதுவாக இருக்கும் என்பதால், இந்த இடங்களை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: