அமெரிக்க அதிபரை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜன.7: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அதிபர் மதுரோவை கைது செய்த அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கபூபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கருப்புச்சாமி, சுரேஷ் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் முனியராஜ், ஈஸ்வரன், சந்தியாகு, அழகர்சாமி, தென்னரசு, வழக்கறிஞர் மதி, ஜனநாயக மாத சங்க மாவட்ட செயலாளர் ரோகிணி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: