இந்திய கப்பல் படை ரகசியங்களை பாக். உளவாளிக்கு பகிர்ந்தவர் கைது

அகமதாபாத்: இந்திய கடலோர கப்பல் படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த நபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் வசிக்கும் பங்கஜ் கோட்டியா, அங்குள்ள கப்பல் தளத்தில் தொழிலாளராக பணியாற்றுகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன் முகநூல் பதிவு மூலம் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாகிஸ்தான் உளவாளி ரியா என்ற பெண் பெயரில் பங்கஜ் கோட்டியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். மேலும் தான் இந்திய கப்பல் படையின் மும்பை பிரிவில் பணியாற்றுவதாக ரியா கூறியுள்ளார். இதையடுத்து யுபிஐ பரிவர்த்தனை மூலம் பாகிஸ்தான் உளவாளியிடமிருந்து ரூ.26,000 பெற்ற பங்கஜ் கோட்டியா, இந்திய கடலோர கப்பல் படை கப்பல்கள், கப்பல் தளம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளி ரியாவிடம் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் பங்கஜ் கோட்டியாவை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

The post இந்திய கப்பல் படை ரகசியங்களை பாக். உளவாளிக்கு பகிர்ந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: