காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: கட்சி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே கடந்த 2022 அக்டோபர் 26ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. 82 வயதான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று காலை கார்கேவின் வீட்டிற்கு ராகுல்காந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதோடு கேக் வெட்டி கார்கேவுக்கும், அங்கு இருந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வழங்கினார். அவர் தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் பல தேர்தல் வெற்றிகளை பெற்றது. 2019 பொது தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டும் பெற்றது. தற்போது நடந்த தேர்தலில் மக்களவையில் கட்சியின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

The post காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: