மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பெடல் பிங்க் சைக்கிள் பேரணி: அமைச்சர் ஆவடி சா.மு நாசர் துவக்கினார்

திருவள்ளூர்: புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல்ஸ் ஆகியவை இணைந்து “பெடல் பிங்க்” என்ற சைக்கிள் பேரணியை நடத்தியது. புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார். அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர்.எஸ்.கௌதமன், முதுநிலை ஆலோசகர் டாக்டர் கே.ஹரீஷ்குமார், முதுநிலை நிபுணர் டாக்டர் மதுபிரியா முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் ஸ்ரீபால் வரவேற்றார்.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். இதில் அமைச்சர் சா.மு.நாசர் பேசும்போது, ‘’மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுகாதாரம் சார்ந்த ஒரு விஷயம் மட்டுமல்ல, அதுவொரு சமூகப் பொறுப்பாகும். ‘பெடல் பிங்க்’ சைக்கிளத்தான் பேரணியின் மூலம்ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிப்பதும் மற்றும் குடும்பங்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கு அதிகாரமளிப்பதும் நமது நோக்கமாகும். பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் விரைவாக சரி செய்ய முடியும்’ என்றார்.

இதில் டாக்டர்கள் பிரபு சங்கர், அபர்ணா, திமுக மாநில நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், சி.ஜெரால்டு, நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், பொன்.பாண்டியன், ஒன்றிய செயலாளர் ச.மகாலிங்கம், மாவட்ட அமைப்பாளர்கள் களம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.கே.பாபு, ஆணழகன் டி.ஆர்.திலீபன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எச்.ஜெயபிரகாஷ், விஜயநாராயணன், அர்ஜூனா அ.குமரன், சரவணகுமார், சந்துரு, ஜெயக்குமார், தனசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பெடல் பிங்க் சைக்கிள் பேரணி: அமைச்சர் ஆவடி சா.மு நாசர் துவக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: