துவரங்குறிச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

 

துவரங்குறிச்சி. அக்.25: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலைப் பொழுதிலிருந்து வானம் மேகமூட்டத்துடனும் சில சமயங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவும் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் பலத்த சத்தத்துடன் கூடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் வாகன ஓட்டிகள் பலத்த மழையால் வாகனத்தை சற்று நிதானமாகவே இயக்கினர். தற்பொழுது மழைநீர் பெருக்கெடுத்து வருவதால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இந்த மழை சம்பா சாகுபடி பணிக்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகல் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post துவரங்குறிச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை appeared first on Dinakaran.

Related Stories: