துறையூரில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: தொடக்கப் பள்ளி கட்டுமான பணி

துறையூர், டிச.25: துறையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிகளை பெரம்பலூர் எம்பி அருண் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வைத்தார்.

முன்னதாக துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் சமத்துவபுரம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக பெரம்பலூர் எம்.பி.அருண் நேரு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வெங்கடேசபுரம் ஊராட்சியில் புதிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுவதற்கான பணிகளையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன், முத்துச்செல்வன், அசோகன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆதிதிராவிட நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி ,நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post துறையூரில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: தொடக்கப் பள்ளி கட்டுமான பணி appeared first on Dinakaran.

Related Stories: