திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப்பதிவு

திருவெறும்பூர், டிச.28: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 11 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் நேற்றுமுன்தினம் கண்ணை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதி இல்லாமல் சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அமைப்பாளர் செந்தில்குமார் ( 27 ), அமைப்பின் மாநில செயலாளர் சந்தோஷ்குமார் (21), மாநகர மாவட்ட செயலாளர் ராம் (20) உள்பட 11 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

The post திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: