துவரங்குறிச்சி, டிச.25: துவரங்குறிச்சியில் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து வி.சி.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னம்பட்டி பேரூராட்சி விசிக நகரச் செயலாலர் ஜாபர் தலைமை வகித்தார். விசிக தொகுதி துணைச் செயலாளர் செல்லையா, மகளிரணி நாச்சம்மை, மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் கோட்டை ரபீக், திமுக முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜா காவிரி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விசிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, மாநில துணைச் செயலாளர் கனியமுதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விசிக ஒன்றியச் செயலாளர்கள் ரவி, சிறுத்தை குணா, சிறுத்தை சிவா, மணிவேல், விஜயபால், பச்சையம்மாள், சிவக்குமார், தீபன், ராஜ்குமார் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
The post எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்: துவரங்குறிச்சியில் விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.