புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு விற்பனை கடை

 

புதுக்கோட்டை,அக்.25: எம்.எம்.16, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது;

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு, இந்தாண்டு தீபாவளிக்கு புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு ரூ.45 லட்சம் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு பட்டாசு விற்பனை இலக்கு ரூ.1.25 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர்.லியாகத் அலி,, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.ஜீவா, வட்டாட்சியர்.பரணி, மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு.சி.அருண்ராஜ் மற்றும் மாநகர செயலாளர்.செந்தில்,, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு விற்பனை கடை appeared first on Dinakaran.

Related Stories: