திருவெறும்பூர், அக்.24: திருவெறும்பூர் அருகே குடிபோதையில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏஆர்கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி லதா (55). இவரது மகன் ரஞ்சித் (35). ரஞ்சித்திற்கு அதிக குடிப்பழக்கம் உள்ளது.
இந்நிலையில் நேற்று லதாவை ரஞ்சித் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதனால் அவரது அடி பொறுக்க மாட்டாமல் லதா திருச்சியை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் லாதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post குடிபோதையில் தாயை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.