மனைவியை பிரிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சுழி, அக்.24: நரிக்குடி அருகே பூவாக்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன்(45). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் அரசகுளம் கிராமத்தை சேர்ந்த சங்கரேஸ்வரி (37) என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருக்குமரன் தினந்தோறும் குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சங்கரேஸ்வரி தனது குழந்தைகளோடு, தாயுடன் அரசகுளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விவசாய பணிக்காக வைத்திருந்த விஷ மருந்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த திருக்குமரனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு திருக்குமரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மனைவியை பிரிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: