திடக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட செழிப்பு இயற்கை உரம்: பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி பகுதியில் திடக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட செழிப்பு இயற்கை உரம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்படி திடக்கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தற்போது நகராட்சி, மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி நகராட்சி பகுதியில், குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை துணி பைகளில் வைத்து செழிப்பு இயற்கை உரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில், பூந்தமல்லி நகராட்சி பேருந்து நிலையத்தில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நகராட்சி ஆணையர் லதா பொதுமக்களுக்கு இலவசமாக செழிப்பு இயற்கை உரத்தை வழங்கினார். மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி, பின்னர் பொதுமக்களுக்கு இந்த உரம் வழங்கப்பட்டது. இதனை பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திடக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட செழிப்பு இயற்கை உரம்: பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: