கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் பண பரிவர்த்தனை பயிற்சி முகாம்

திருச்சி, அக்.23: சட்டப்பேரவை விதி எண் 110-ன் படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் அறிவிப்பு எண் 5ன் படி திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த (CSC) பொது சேவை மைய பணியாளர்களுக்கு திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் DIGIPAY மூலம் பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொள்ள CSC- யின் மாவட்ட மேலாளர்கள் புவனேஸ்வரன் மற்றும் மணிமாறன் ஆகியோரால் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் திருச்சி லால்குடி முசிறி மற்றும் மணப்பாறை பகுதிகளை சேர்ந்த அனைத்து CSC பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதன் மூலமாக மக்கள் அனைவரும் CSC பொது சேவை மைய சேவைகள் மற்றும் அனைத்து வங்கிப் பணைப் பரிவர்த்தனைகள் பெற்று கொள்ள முடியும்.

The post கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் பண பரிவர்த்தனை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: